Poetry

பாப்பாப் பாட்டு

Following Tamil poem is the work of a famous Tamil poet Subrahmanya Bharathiyar (1882-1921). It’s translation is done by Mr. NV Subbaraman, he lives in Chennai.

 

ஓடி விளையாடு பாப்பா! –நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!

கூடிவிளையாடு பாப்பா!-ஒரு

குழந்தையை வையாதே பாப்பா!        (1)

*

சின்னஞ் சிறுகுருவி போலே –நீ

திரிந்து பறந்துவா பாப்பா.

வன்னப் பறவைகளைக் கண்டு – நீ

மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா!     (2)

*

கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்

கூட்டி விளையாடு பாப்பா

எத்தித் திரியுமந்தக் காக்காய் – அதற்கு

இரக்கப் படவேணும் பாப்பா!        (3)

*

பாலைப் பொழிந்து தரும் பாப்பா! – அந்தப்

பசுமிக நல்லதடி பாப்பா!

வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது

மனிதர்க்குத் தோழனடி பாப்பா!         (4)

*

வண்டி இழுக்கும் நல்ல குதிரை – நெல்லு

வயலில் உழுதுவரும் மாடு,

அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு – இவை

ஆதரிக்க வேணுமடி பாப்பா!            (5)

*

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு;

மாலை முழுதும் விளையாட்டு – என்று

வழக்கப் படுத்திக் கொள்ளு  பாப்பா!          (6)

*

பொய்சொல்லக் கூடாது பாப்பா – என்றும்

புறஞ்சொல்ல லாகாது பாப்பா!

தெய்வம் நமக்குத்துணை பாப்பா! – ஒரு

தீங்குவர மாட்டாது பாப்பா!             (7)

*

பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா!

மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!        (8)

*

துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா!

அன்புமிகுந்த தெய்வ முண்டு – துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!     (9)

*

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! – தாய்

சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!

தேம்பி யழுங்குழந்தை நொண்டி – நீ

திடங்கொண்டு போராடு பாப்பா!         (10)

*

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற – எங்கள்

தாயென்று கும்பிடடி பாப்பா

அமிழ்தில் இனியதடி பாப்பா! – நம்

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!          (11)

*

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்

தொழுது படித்திடடி பாப்பா!

செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் அதைத்

தினமும் புகழ்ந்திடடி பாப்பா!           (12)

*

 வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்

வாழும் குமரிமுனை பாப்பா!

கிடக்கும் பெரிய கடல் கண்டாய் – இதன்

கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!              (13)

*

வேதமு டையதிந்த  நாடு – நல்ல

வீரர் பிறந்த திந்த நாடு,

சேதமில் லாதஹிந்துஸ் தானம் – இதைத்

தெய்வமென்று கும்பிடடி பாப்பா!             (14)

*

சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்!       (15)

*

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்;

வைர முடைய நெஞ்சு வேணும்– இது

வாழும் முறைமையடி பாப்பா!          (16)

~

CHILDREN’S SONG

Run and play my nice little child

Be not at lazy rest Even mild

Join with others and play full

                                              Abuse not another child ill!                                      (1)

*

Like a sparrow beautiful-

Fly, glide and  roam plenty full

Looking at the birds lovely-an art

                                     Feel  happy quite  in your heart!                            (2)

*

The hen that  pecks with its sharp beak

Needs to be played with joy and sleek

The crow that picks its food from away

                                       Needs to be seen with sympathy each day!                           (3)

*

The cow that yields healthy milk big and small

Indeed a great and good, nice pet animal

The dog that wags its tail and comes around

                               Indeed man’s friend good and great on ground!                         (4)

*

The horse that pulls the cart fast

That buffalo that tills the land vast

The goat that depends on us cute

                                   All to be taken care of well absolute!                              (5)

*

As you get up in the early morn- study

Then music and arts to be learnt ready

In the evenings games and play

                                         To be practiced well every day!                                         (6)

*

Tell never lies my child

Abuse not from the back slight

God is there, sure to our support

                                                      Never comes  harm – quite comfort!                                              (7)

*

Fear not at the rogues and the rough

Who come to harm you  tough

Hit and crush them strong

                                                          Spit at their face along!                                                        (8)

*

When sufferings haunt us

Get not perturbed be pious

Kind God is there compassionate

                                                    All sufferings will go – dispassionate!                                        (9)

*

Laziness is always worse

Neglect never mother’s words!

The lame child that weeps there

                                           Take care quite bold and fair!                                      (10)

*

The land of Tamils where you are born

Be revered as your mother and respected – a lawn

Sweeter than the nectar sure

                         Our ancient land my darling pure!                         (11)

*

The words are high and sweet tall

Read Tamil with respect and love all

Our Bharath-rich with heritage

                                        Praise daily and in honor with advantage!                               (12)

*

Himalayas in the North

Cap Comerin in the South

Oceans quite large and vast

                                              In the close East and West!                                      (13)

*

Scriptures and Vedas galore in the land

That gave birth to scholars and the brave on hand

India without any holes ; mighty

                                  Revere and respect as God Almighty!                        (14)

*

 No caste and race high and low

Crime to talk ill on that basis- a blow

Those who are  wise, well read and just

                                           With love are indeed people great!                           (15)

*

Love all the living beings

Believe in God, the Creator of all beings

Heart- with will and valor is the need

                                           Best way of leading life indeed!                                             (16)

*

                                                           ~ Translated by Mr. NV Subbaraman

                                                   Chennai, India

One Comment

  1. thota chandrasekhara reddy

    “Love all the living beings

    Believe in God, the Creator of all beings”

    NICE MESSAGE. I wish to further improve it by saying we should love everything in creation whether it is a living being or non-living being.

    THOTA CHANDRASEKHARA REDDY,Hyderabad.9866411292.